2025 (10 வது வருடாந்திர) ஸ்டீவ் விருதுகளுக்காக உங்கள் நிறுவனத்தின் பரிந்துரைகளை சமர்ப்பிக்க அழைக்கிறோம். சிறந்த முதலாளிகள்,உலகின் சிறந்த மனித வள சாதனைகள்,குழுக்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள், புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள், விநியோகஸ்தர்கள் மற்றும் வேலை செய்ய சிறந்த இடங்களை உருவாக்க உதவியவர்கள் இதில் அடங்குவர்.
உங்களது மின்னஞ்சல் முகவரியை இங்கே சமர்ப்பித்தால், உங்களது பரிந்துரைகளை எவ்வாறு தயார்செய்வது மற்றும் சமர்ப்பிப்பது தொடர்பான அனைத்துத் தகவல்களும் அடங்கிய நுழைவுத்தகவல் பட்டியலை மின்னஞ்சலில் அனுப்புகிறோம். மிகவும் பாதுகாப்பான தனியுரிமைக்காப்புமுறையை நாங்கள் பின்பற்றுவதால், எக்காரணம் கொண்டும் உங்களது மின்னஞ்சல்முகவரி வேறுயாரிடமும் பகிரப்படாது.
இந்தத்தளத்தின் இந்தப்பக்கம் மட்டுமே இந்தமொழியில் நீங்கள் காணமுடியும். நுழைவுத்தகவல் பட்டியல் உட்பட, மற்ற பக்கங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருக்கும். இதற்குக்காரணம், பரிந்துரைகள் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், சர்வதேச அளவில் தொழில்வல்லுநர்கள் மதிப்பிடும் செயலோட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவுமே. கீழே விருதுகள், சமர்ப்பிக்கத் தேவையானவைகள் மற்றும் பங்கேற்பதன் பலன்கள் குறித்த ஒரு சுருக்கமான குறிப்பு கீழே தரப்பட்டுள்ளது. உங்கள் அமைப்பை விருதுகள் பரிந்துரைகளுக்கு சமர்ப்பிக்க நீங்கள் முடிவுசெய்தால், உங்கள் பரிந்துரைகள் ஆங்கிலத்தில் தயார்செய்யப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சிறந்த முதலாளிகளுக்கான ஸ்டீவி விருதுகள் மட்டுமே உலகளவில் மனிதவளத்துறை சார்ந்தோரையும் உலகின் மிகச்சிறந்த முதலாளிகளையும் அங்கீகரிக்கும் விருதுகள் நிகழ்வை நடத்துகிறது. ஸ்டீவி விருதுகளை வழங்கும் இந்த அமைப்பானது, அமெரிக்காவில் அமைந்துள்ளது. இந்த அமைப்புதான் எட்டு வெவ்வேறு ஸ்டீவி விருதுகளை தகுந்த போட்டியாளர்களுக்கு வழங்குகிறது, நீங்கள் இதைபற்றி www.StevieAwards.comஇல் அறிந்து கொள்ளலாம். இந்த ஸ்டீவி விருது கோப்பை உலகின் மிகவும் பாராட்டப்பட்ட பரிசுகளில் ஒன்றாக கருதப்படுகிறது.
2024 ஆம் ஆண்டின் சிறந்த முதலாளிகளுக்கான விருதுகள் 28 நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் தனி நபர்களுக்கு வழங்கப்பட்டது . 2024 ஆம் ஆண்டிற்கான வெற்றியாளர்களின் பட்டியலை காண இங்கே க்ளிக் செய்க
சிறந்த முதலாளிகளுக்கான ஸ்டீவி விருதுகளில் ஆறு விருதுவகைகளைத் தேர்வு செய்யலாம். நீங்கள் பங்கேற்க வேண்டுமானால், உங்களது நிறுவனம் எந்தச் சாதனைகளுக்கான அங்கீகாரத்தை எதிர்நோக்குகிறதோ அதற்குப் பொருத்தமான பிரிவுகளைத் தேர்வுசெய்து, அந்த பிரிவுகளுக்கான உங்களது பரிந்துரைகளை அறிவுறுத்தப்பட்டபடி தயாரிக்கவும். பிரிவுகள் கீழே:
ஒவ்வொரு பிரிவுகளின் பட்டியல் மற்றும் விளக்கங்கள் நுழைவுகிட்-இல் உள்ளது.
அனைத்து வகையினங்களிலும் நீங்கள் கேள்விகளுக்கான விடைகளை எழுத்துவடிவிலோ அல்லது கேள்விகளுக்கு விடையளிக்கக்கூடிய ஐந்து (5) நிமிடங்கள் ஓடக்கூடிய காணொளியாகவோ வழங்கும் விருப்பத்தேர்வு உள்ளது.
இந்த ஸ்டீவி விருதுகள் பல நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளது. இந்த பிரதிநிதிகள் தகவல்களை நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்து விருதுகளில் பங்கேற்ப உதவுவார்கள். உங்களது நாட்டில் பிரதிநிதிகள்யாரேனும் உள்ளனரா என்பதை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்
அமைப்பாளர்களை பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்
The Stevie Awards
10560 Main Street, Suite 519
Fairfax, Virginia 22030, USA
தொலைபேசி: +1 703-547-8389
தொலைநகல்: +1 703-991-2397
மின்னஞ்சல்: help@stevieawards.com
Share